தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிநவீன போர் விமானம் மாயம் - தேடும் பணிகள் தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிநவீன போர் விமானம் மாயம் - தேடும் பணிகள் தீவிரம்

தாய்வானில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வானுக்கும், சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெற்ற போதும் தாய்வானை தனது நாட்டின் அங்கமாகவே சீனா கருதி வருகிறது. 

மேலும், தாய்வானை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி சீனா தனது போர் விமானங்களை பறக்கச் செய்வதும் தினசரி நிகழ்வாகவே உள்ளது.

ஆனால், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற தாய்வான் போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அந்நாட்டிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. மேலும், தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் தாய்வான் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப் 16 ரக போர் விமானங்கள் தாய்வானிடம் 150 க்கும் அதிகமான அளவில் உள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் தாய்வானுக்கு எப் 16 ரக போர் விமானங்கள் பெரும் உதவி செய்கின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குவலியன் விமானப் படைத் தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

போர் விமானங்கள் வானில் பறந்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பின்னர் மீண்டும் தளத்திற்கு திரும்பும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டுந்தன.

அப்போது, 44 வயதுடைய விமானியான கர்னல் ஜியாங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.

இதையடுத்து, மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும் பணியை தாய்வான் விமானப் படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனாலும், விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போர் விமானம் மாயமானதையடுத்து, பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 150 க்கும் அதிகமான எப் 16 ரக போர் விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

No comments:

Post a Comment