இனவாத கருத்துக்களை பரப்புவதற்கு சிறிதரன் போன்றோருக்கு இனி இடமில்லை, அவரது கருத்துக்களை தமிழ் மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார் அனுர பிரியதர்ஷன யாப்பா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

இனவாத கருத்துக்களை பரப்புவதற்கு சிறிதரன் போன்றோருக்கு இனி இடமில்லை, அவரது கருத்துக்களை தமிழ் மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறார் அனுர பிரியதர்ஷன யாப்பா

இனவாதக் கருத்துக்களை பரப்புவதற்கு சிறிதரன் போன்றோருக்கு இனியும் இடம் கிடைக்காது. அதனை தமிழ் மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதைதான் தேர்தல் முடிவுகளும் எடுத்துக் காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்த நாட்டில் துர்திஷ்டமான நிலையை யார் ஏற்படுத்தியதென சிறிதரன் எம்.பிக்கு தௌவுப்படுத்த விரும்புகிறேன். பிரபாகரன் என்பவர் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளார். அந்த நாசகார செயலை நாம் சரி செய்துள்ளோம்.

இனவாதக் கருத்துகளை பரப்பும் வகையில் ஒரு காலத்தில் செயற்பட்டிருந்திருந்தீர்கள். அதனை மீண்டும் செய்ய இடம் கிடைக்காது. உங்களுடைய இனமே அதனை ஏற்றுக் கொள்ளாது. 

மாகாண சபைகளில் நிதியிருந்து பணிகள் செய்யப்படவில்லை. பிரதேச சபைகள் உள்ளன. என்ன செய்கின்றீர்கள்? மக்களுக்கு பணியாற்றாது பாராளுமன்றில் பொய்யான உரைகளை நிகழ்த்தி வருகின்றீர்கள். 

தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்படுவதும் நாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவதும் இராணுவத்தின் பணியாகும். அவ்வாறு இல்லாது நாட்டை கொண்டு செல்ல முடியாது. 

கசப்பான சந்தர்ப்பங்களில் சில உயிர்கள் இழந்தமையையிட்டு நாங்கள் கவலையடைகிறோம். ஆனால், அவர்களை அந்த நிலைக்கு கொண்டு சென்றவர்களை நினைத்து கோபமடைகிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment