சத்திர சிகிச்சைக்கான முகக்கவச இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

சத்திர சிகிச்சைக்கான முகக்கவச இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

நாட்டின் நாளாந்த முகக்கவசத் தேவைப்பாடு தற்போது சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரமாகும். இவற்றில் 50 வீதமானவை இறக்குமதி மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றன.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையில் நேற்று உள்நாட்டு முகக்கவச உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்நாட்டு முகக்கவச உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதன்போது குறிப்பிட்டார்.

உள்நாட்டு முகக்கவச உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக சத்திர சிகிச்சைக்கான முகக் கவசங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை சத்திர சிகிச்சைக்கான முகக்கவசத்தின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 15 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.என் 95 முகக்கவசத்தை 100 ரூபாவிற்கு விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. முகக்கவச உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்காக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment