அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் : அதாஉல்லாவின் பணிக்கு இதயபூர்வ நன்றிகளை தெரிவித்த உறுப்பினர்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 5, 2020

அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் : அதாஉல்லாவின் பணிக்கு இதயபூர்வ நன்றிகளை தெரிவித்த உறுப்பினர்கள்

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.றாஸிக் தலைமையில் இன்று (05) காலை நடைபெற்ற வாக்கெடுப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறியது.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 08 உறுப்பினர்களும் அமர்வில் கலந்து கொண்டு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஏகமனதாக வாக்களித்திருந்தனர். 

இவ்வாக்கெடுப்பு அமர்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் எல்.எம்.இர்பான், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தர் எம். முகம்மட் றிஸ்வி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வாக்களிப்பின் பின்னர் தவிசாளர்,உப தவிசாளர், உறுப்பினர்கள் இங்கு கருத்து தெரிவித்த போது பிரதேச சபைகளுக்கு முன்னுதாரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை கொண்டு செல்ல சகல உறுப்பினர்களினதும் உத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், தங்களின் பிரதேசத்தை தாங்களே அழகுற ஆட்சி செய்யவும், எங்களின் பிரதேசத்தின் குறைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்து கொள்ளவும் வழியேற்படுத்தி தந்து எங்களுக்கான சபை ஒன்றையும் உருவாக்கி தந்த முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு நன்றிகளை தெரிவிக்கும் நேரம் இது என மகிழ்ச்சி வெளியிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad