வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்வது எப்படி? - முடக்கப்பட்டுள்ள மற்றுமொரு பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்வது எப்படி? - முடக்கப்பட்டுள்ள மற்றுமொரு பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலொன்றான கொழும்பு - 15 மோதரையின் “மெத்சந்த செவன” தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் இன்று (22) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பிரச்சினைகளும் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகின்ற போதிலும், அத்தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது எனவும் குறித்த பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தினம் (21..11.2020) கொழும்பு - 15 மோதரை - இக்பாவத்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வீதிக்கிறங்கி இது போன்றதொரு ஆர்ப்பாட்மொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறிருக்கையில், நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்கள் பதிவாகி வருகிறது. நேற்றையதினம் (21.11.2020) மாத்திரம் கொழும்பில் 9 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment