பதுளை மாவட்டத்தில் இதுவரை 37 கொரோனா தொற்றாளர்கள் - 1308 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, November 20, 2020

பதுளை மாவட்டத்தில் இதுவரை 37 கொரோனா தொற்றாளர்கள் - 1308 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

பதுளை நகரில் நேற்று வியாழக்கிழமை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் புதன்கிழமை நுகேகொடை மீன் சந்தையில் பணி புரியும், கொழும்பிலிருந்து பதுளைக்கு வந்த 34 வயதையுடைய நபரே இவ்வாறு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளவர் என பதுளை பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து குறித்த நோயாளியை உடனடியாக தியதலாவ கஹகல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

பதுளை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம இன்று மாவட்ட செயலகத்தில் ஊகடங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்று நோயாளர்கள் 37 பேர் பதிவாகியுள்ளனர், இவர்களில் அனேகமானோர் நுகேகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைகளுடன் தொடர்புபட்டவர்களினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு நோயாளர்களும், கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும், பதுளையில் இரண்டு நோயாளர்களும் பசறையில் மூன்று நோயாளர்களும், லுனுகலையில் ஐந்து நோயார்களும், வெளிமடையில் ஒருவரும், ஊவபரணகமயில் ஒருவரும், எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும், பண்டாரவளையில் எட்டு நோயாளர்களும், ஹப்புத்தலையில் எட்டு நோயாளர்களும், ஹல்துமல்லை பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு தொற்றாளர்களும் மொத்தமாக பதுளை மாவட்டத்தில் 37 கோவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும், சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம தெரிவித்தார்.

மேலும் பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம இன்று தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுடன் தொடர்புப்பட்டவர்ளாக 1308 பேர் சுயத்தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் 141 பேர் சுயத்தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பிரதேசத்தில் 159 பேரும் எல்ல பிரதேசத்தில் 39 ஹல்துமுல்லை பிரதேசத்தில் 84 பேரும் ஹாலிஎல பிரதேசத்தில 127 பேரும் அப்புத்தலையில் 100 பேரும், கந்தகெடிய பிரதேசத்தில் 44 பேரும் லுனுகலை பிரதேசத்தில் 167 பேரும் மஹியாங்கனை பிரதேசத்தில் 80 பேரும் மிகாகிவுல பிரதேசத்தில் 23 பேரும் பசறையில் 46 பேரும் ரிதிமாலியத்த பிரதேசத்தில் 40 பேரும் சொரணாதோட்ட பிரதேசத்தில் 56 பேரும் ஊவாபரணகம பிரதேசத்தில் 55 பேரும் வெலிமடை பிரதேசத்தில் 147 பேருமாக பதுளை மாவட்டத்தில் 1308 பேர் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவது அனைவரதும் பொறுப்பாகும். பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு வெளிமாவட்ட வாகனங்கள் வருவதையும் வெளிமாவட்டங்களுக்கு செல்வதையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய கருமங்கள் தவிர்ந்த விடயங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

மேலும் சுகாதார பிரிவினரின் உதவியுடன் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு பதுளை மாவட்டத்துக்கு வருகை தருவோரும் செல்வோருக்கும் பதினான்கு நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தும் செயற்பாடுகள் சுகாதாரத் துறையினரின் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக செயற்படுத்தப்படுவதோடு பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மாவட்ட கொரோனா தொற்று கட்டுபாட்டு குழு செயற்படுவதாகவும் இதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நடைமுறைப்படுத்துவதாகவும் பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்கள் சுகாதார அமைச்சின் சுகாதார பரிந்துறைகளை பின்பற்றி சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம தெரிவித்தார்.

No comments:

Post a Comment