தலவாக்கலை, கினிகத்தேனையில் இரு யுவதிகளுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

தலவாக்கலை, கினிகத்தேனையில் இரு யுவதிகளுக்கு கொரோனா

தலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு - தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவருடன் கடந்த 16 ஆம் திகதி சென் கிளாயர் பிரிவுக்கு வந்துள்ளார். கணவர் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக லிந்துலை லிப்பகலை தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த காரணத்தால் குறித்த யுவதி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவர் உட்பட அவருடன் பழகியவர்கள் சுயதனிமைபடுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள யுவதி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியிலும் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10 ஆம் திகதியே அவர் ஊர் திரும்பியுள்ளார். 19.11.2020 அன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad