அமெரிக்க சி.ஐ.ஏவுக்கு வேவு பார்த்த ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

அமெரிக்க சி.ஐ.ஏவுக்கு வேவு பார்த்த ரஷ்யருக்கு 13 ஆண்டு சிறை

ரஷ்யாவின் வடக்கு கடற்படை பற்றிய ரகசியங்களை அமெரிக்க மத்திய உளவுப் பிரிவான சி.ஐ.ஏவுக்கு வழங்க முயன்ற குற்றச்சாட்டில் ரஷ்யாவில் ஒருவருக்கு நேற்று 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

யூரி எசன்கோ என்ற அந்த ஆடவர் தேசத்ரோகக் குற்றச்சாட்டில் மொஸ்கோவின் வட மேற்காக உள்ள பிரியன்ஸ் நீதிமன்றம் ஒன்றினால் குற்றங்காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 

ரஷ்ய பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி இருக்கும் இவர் 2015-2017 காலப் பகுதியில் ரஷ்ய வடக்கு கடற்படை கப்பல்களின் கதிரியக்க மின்னணு அமைப்பில் பணியாற்றியுள்ளார். அதன் ரகசிய ஆவணங்களை பெற்றே அதனை அமெரிக்க உளவுப் பிரிவுக்கு வழங்க முயன்றுள்ளார். 

எனினும் இந்த முயற்சியின்போது அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். தமது செயலுக்காக அவர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad