அதிகரிக்கும் கொரோனா தொற்று : இலங்கைக்கு 100 ஆவது இடம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

அதிகரிக்கும் கொரோனா தொற்று : இலங்கைக்கு 100 ஆவது இடம்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, ஒவ்வொரு நாளும் பலர் மரணிக்கின்றனர்.

உலகில் மாத்திரமன்றி, இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில், வைரஸ் தாக்க நிலை தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய நாளின் (15.11.2020) நிலவரப்படி இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் கொரோனா தாக்கத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் 219 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பான பட்டியலில் இலங்கை 100 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியே 48 இலட்சத்து 718 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 இலட்சத்து 3 ஆயிரத்து 946 ஆகவும், 3 கோடியே 81 இலட்சத்து 22 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment