ஏறாவூர் பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

ஏறாவூர் பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூரில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கு அமைச்சரவைத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த 26.10.2020 அன்று கூடிய அமைச்சரவை இதற்காகான அனுமதியை வழங்கியுள்ளது.

ஏறாவூர் புன்னைக்குடாப் பிரதேசத்தில் நிறுவப்படவுள்ள துணி உற்பத்தி தொடர்பான தொழில் முயற்சியாளர்களுக்கென விஷே‪ட கைத்தொழில் வலயம் அமைப்பதற்கே இந்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கைத்தொழில் அமைச்சின் விஷே‪ட முன்னுரிமையாக முதலீட்டுச் சபை காணி மறுசிரமைப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏறாவூர் பிரதேசத்தில் ஆடைக் கைத்தொழில் பேட்டையை ஆரம்பிப்தற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்மொழியப்பட்ட துணிக் கைத்தொழில் வலயம் துணி உற்பத்தியுடன் தொடர்புபட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு விஷே‪டமான கைத்தொழில் வலயம் மூலோபாய அபிவிருத்தித் திட்டமாக அறிவிப்பதற்கும் அதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணி மறுசிரமைப்பு ஆணைக்குழுவுக்கு உரித்தான 275 ஏக்கர்களை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கப்படவும் உள்ளது.

மேலும் இந்தக் கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்யவும் இந்தக் கைத்தொழில் வலயத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு வழங்குவதற்கும் கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad