ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

தாம் மீள கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் தலைமையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் இன்று மன்றில் ஆஜராகாமையால் அவர்களுக்கு மறு அறிவித்தலை அனுப்புமாறு நீதிபதிகள் குழாம், மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட 07 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனு அவசர தேவைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் குறித்த மனுவை இம்மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment