ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும் - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Friday, October 16, 2020

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும் - சுமந்திரன்

வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடை விதித்து வருகின்றனர். இந்நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

குறித்த ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் 16.10.2020 இன்றையதினம் வவுனியா தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமந்திரனைச் சந்தித்து முறையிட்டனர். இச்சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன. ஆலயத்தில் பூசை செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை தொடர்பாக அந்த ஆலயத்தினுடைய, பூரவீகம், வரலாறு இவற்றை எல்லாம் வைத்து மக்கள் அங்கே வணங்குவதற்குரிய உரித்து அவர்களுக்கு இருக்கின்றது. அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்வதாக இருக்கின்றோம் - என்றார். 

எனவே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுத் தடகை்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும். என்றார்.

No comments:

Post a Comment