சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு! - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ள சஹ்ரானின் சகாக்களான முகம்மது கனிபா முகம்மது அக்கிரம் பயன்படுத்தி வந்த எவரி ரக கார் ஒன்றை காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வரும் ஏப்பில் 25ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகம்மது கனிபா முகம்மது அக்கிரம் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த கார் ஒன்ரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் என்.அன்பரசன், அருள்குமார், பந்துல, சரோன் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்தில் கார் தரிப்பிடம் ஒன்றில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கார்மூடும் தரப்பாலால் மூடி மறைத்து வைத்திருந்த நிலையில் காரை மீட்டுள்ளனர்.

இந்த காரில் காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக குற்றவியல் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad