உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஐரோப்பிய பிராந்தியம்தான் அதிகபட்ச பாதிப்பாக 46 சதவீத பங்களிப்பை (13 லட்சம் பேர்) கொண்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுவதும், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவதும் 21 ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

கடந்த 3 வாரங்களாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை பதிவு செய்வதில் மாறாமல் இருப்பதாவும் அது தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad