ரிஸ்லியின் அழைப்பில் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு கிழக்கு ஆளுநர் விஜயம் : தேவைகளை பூர்த்தி செய்ய கோரி மகஜர்களும் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

ரிஸ்லியின் அழைப்பில் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு கிழக்கு ஆளுநர் விஜயம் : தேவைகளை பூர்த்தி செய்ய கோரி மகஜர்களும் கையளிப்பு

(நூருல் ஹுதா உமர்)

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யாஹம்பத் இன்று மாலை (15) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபாவின் அழைப்பின் பெயரில் விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்தியசாலையை பார்வையிட்டதோடு வைத்தியசாலை குறை நிறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்தி சபைக் குழுவினரால் வைத்தியசாலைக்கு அவசரமாக தேவையாகவுள்ள தேவைகளை எடுத்துக் கூறி அதற்கான மகஜரோன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் கௌரவ அதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.கே. ரஜாப்டீன், வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதிகள் , ஊழியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad