இறுதி கட்டத்தை அடைந்த சீனாவின் மூன்று கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

இறுதி கட்டத்தை அடைந்த சீனாவின் மூன்று கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது

சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 981 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 390 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நான்கு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை அடைந்து விட்டதாகவும், அதில் மூன்று தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த மையத்தின் தலைமை வல்லுநர் குய்சென் வூ ‘‘சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசி ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு போடப்பட்டது. அதன்பிறகு மோசமான பக்கவிளைவுகளோ அல்லது அறிகுறியோ எனக்கு ஏற்படவில்லை’’என்றார். ஆனால் அந்த தடுப்பூசியின் பெயர் குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad