சீனாவின் ஐந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

சீனாவின் ஐந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது அமெரிக்கா

சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தொடர்பில் சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சில ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா தடை வித்துள்ளது.

இந்த உற்பத்திகளை மேற்கொள்ள கட்டாய தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அன்ஹுய் மாகாணம் மற்றும் சின்ஜியாங்கில் ஐந்து நிறுவனங்களில் இருந்து வரும் ஆடைகள், பருத்தி, கணனிப் பாகங்கள் மற்றும் சிகை தொடர்பான உற்பத்திகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் அந்தப் பிராந்தியத்தில் பரந்த அளவில் தடை விதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து சீன அரசுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அளித்துவரும் அழுத்தங்களில் சமீபத்திய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுபவர்களின் உழைப்பால் உருவானது என்பதால் தடை செய்யப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களைக் கூறி 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் இன முஸ்லிம்களை ஷின்ஜியாங் மாகாணத்தில் சீனா தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

முறையற்ற, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் முறைகளை உள்ளடக்கிய உழைப்பு மூலம் உருவான பொருட்களை அமெரிக்க விநியோகச் சங்கிலியில் நுழைவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment