தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை உயரும் சாத்தியம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை உயரும் சாத்தியம்

தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகள் மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன் தேங்காய்கள் மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வெண்டும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கமும் பொதுமக்களும் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad