ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது
நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவது குறித்து நெல்லியடி விசேட காரியாலயத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல்துறை அதிகாரி ஜெயதிலக தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 கிராம் 07 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைவசம் வைத்திருந்த பருத்தித்துறை அல்வாய் வதிரியைச் சேர்ந்த ஒருவரே விசேட நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 4 கிராம் 07 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் , 34 ஆயிரத்து 500 ரூபா பணம், கைத் தொலைபேசி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad