150 கட்சிகள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

150 கட்சிகள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

கோர விபத்துகளில் சிக்கி, சிறுமி உள்ளிட்ட இருவர் பலி..! - No.1 Tamil website  in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online |  Breaking News Headlines, Latest Tamil
(எம்.மனோசித்ரா)

2020 ஆம் ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்காக 150 கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

விண்ணப்பிக்கப்பட்டுள்ள 150 கட்சிகளில் 70 கட்சிகள் ஏற்கனவே உள்ளவையாகும். விண்ணப்பித்துள்ள கட்சிகளில் 40 விண்ணப்பங்கள் அடிப்படை ஆவணங்களைக் கூட பூர்த்தி செய்யாதமையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விண்ணப்பித்துள்ள கட்சிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நேர்முகத் தேர்வினை நடத்தி கட்சிகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் விபரங்களை ஆணைக்குழு வெளியிடும் என்றும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad