13 ஐ நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் - சுமந்திரன் - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

13 ஐ நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் - சுமந்திரன்

13ஆவது திருத்தத்தை மாற்றத் தீர்மானித்தால் மிகப்பெரிய தவறாக அமையும்-  சுமந்திரன் – குறியீடு
13ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், 13வது திருத்தம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்காகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள அவர் மாகாண சபைகளுக்கு வழிவகுக்கும் 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இதுகுறித்து அரசாங்கம் ஏதாவது செய்ய முயன்றால் பாரிய தவறாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக மாகாண சபைமுறை செயற்படாமலிருந்தது எனக் குறிப்பிட்டுள்ள சுமந்திரன், ஏனைய மாகாணங்களில் அந்த முறை நடைமுறையிலிருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஏனைய மாகாணங்களில் மாகாணசபை முறைகை;கு எதிராக குரல்கள் ஒலிக்கவில்லை எனவும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறையையும் இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாங்கள் முழுமையாக எதிர்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad