இந்தியாவில் பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை : மத்திய அரசு அதிரடி - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

இந்தியாவில் பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை : மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா - சீனா ராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இதனால் டிக்டொக் உட்பட 58 க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சீனா தனது ராணுவத்தை பின்வாங்க மறுத்தது. கடந்த சில தினங்களாக மேலும் சீன ராணுவம் அத்துமீறியுள்ளது.

இந்நிலையில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad