
ஆப்கானிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உட்பட 37 தலிபான்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு இராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு பார்யப் மாகாணத்தில் இன்று போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தலிபானின் மூன்று தளபதிகள் உட்பட மொத்தம் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு பிராந்தியத்தின் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகம்மது ஹனிப் ரெசாய் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து பார்யப் மாகாணத்தின் கொய்சர் மற்றும் கவாஜா மாவட்டங்களில் அதிகாலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதிகளான முல்லா சாதிக், முல்லா பஷீர் மற்றும் பைசுல்லா ஆகியோர் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர், அத்துடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கொய்சர் மற்றும் கவாஜா மாவட்டங்களில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்க திட்டங்களைத் தீட்டுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் கூடியிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் முகம்மது ஹனிப் ரெசாய் வித்துள்ளார்.
No comments:
Post a Comment