திடீரென உயிரிழந்த இளைஞன் - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

திடீரென உயிரிழந்த இளைஞன்

திடீரென உயிரிழந்த இளைஞன்
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென்று நேற்று (31) மாலை மரணம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மனையாவெளியை அண்மித்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தனூசியன் (19) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவிலிருந்து சக உறவினர்கள் திருகோணமலைக்கு சுற்றுலா வருகை தந்திருந்த போது அதில் வந்த ஒருவர் தொலைபேசியில் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர் திடீரென தொலைபேசி துண்டிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அவரது வீட்டுக்கு அருகே சென்றபோது தவறுதலாக விழுந்திருந்த குறித்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்ததாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று (01) இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad