பாராளுமன்ற செயற்பாடுகளுக்காக 6 புதிய தெரிவுக்குழுக்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

பாராளுமன்ற செயற்பாடுகளுக்காக 6 புதிய தெரிவுக்குழுக்கள் நியமனம்

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்! | Virakesari.lk
பாராளுமன்ற செயற்பாடுகளுக்கான புதிய தெரிவுக்குழுக்கள் 6 நியமிக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆறு குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சட்டவாக்க நிலையியற் குழு, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் தொடர்பான குழு, நாடாளுமன்ற சபைக் குழு, ஒன்பதாது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழு, பொது மனுக்கள் தொடர்பான குழு மற்றும் நாடாளுமன்ற பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழு ஆகியவற்றுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவாக்க நிலையியற் குழுவில், 17 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் தொடர்பான குழுவில் 12 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் எனவும், நாடாளுமன்ற சபைக் குழுவில் 14 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான தெரிவுக் குழுவில் 16 உறுப்பினர்கள் செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது மனுக்கள் தொடர்பான குழுவில் 23 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment