அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் - பழனி திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் - பழனி திகாம்பரம்

அனுபவம் உள்ளவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கே மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் டி.கே.டபிள்யு. கலாச்சார மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் அங்கு மெளனிகலாக செயற்படக்கூடாது. மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் உரிமைகள் தொடர்பிலும் பேசப்பட வேண்டும். அதற்காகத்தான் மக்கள் எமக்கு வாக்குகளை செலுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்கிறார்கள்.

கடந்த நான்கரை வருடங்களில் நாம் பாராளுமன்றம் சென்று மக்களின் உரிமைகள் தொடர்பில் வாத, பிரதிவாதங்களை முன்னெடுத்தமையினால்தான் மலையகத்தில் பிரதேச சபை, அதிகார சபைகளை நாம் உருவாக்கியது மட்டும் இன்றி உத்தியோகபூர்வமான காணி உறுதி பத்திரத்தினையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் யார் தலைவராக வர வேண்டுமென. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தமையினால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லுகிறது.

நாங்கள் செய்த அபிவிருத்தி திட்டங்களை ஆதாரத்தோடு மக்களின் கைகளில் வழங்கி நாம் வாக்கு கேட்கிறோம். ஆனால் சிலர் எம்மை விமர்சனம் செய்து கொண்டு மக்கள் மத்தியில் வாக்கு கேட்கிறார்கள். 

எம்மை விமர்சிக்காமால் மாற்று கட்சியினை சார்ந்தவர்களுக்கு வாக்கு கேட்க முடியாது. ஏனெனில் அவர்களால் மக்களுக்கு செய்த அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மத்தியில் சாட்சி பகிர முடியாத காரணத்தால், செளமிமுர்த்தி தொண்டமானின் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களை வைத்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

நாம் வாய் மொழி முலம் அளித்த வாக்குறுதியினை செயலின் ஊடாக நிறைவேற்றிருக்கின்றோம். நாம் அனைவரும் சிறுபான்மை மக்கள். நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலா விருந்தினர்களின் வருகையில்லை விமான நிலையம் மூடிய நிலையில் காணப்படுகிறது.

விமல் வீரவன்ச தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் வேண்டாம் என கூறி நாட்டில் இனவாதத்தை தூண்ட முயற்சி செய்கிறார்கள். முத்தையா முரளிதரன் கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேஷனுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறிவருகிறார். கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு ஒரே தலைவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன். சில ஒட்டுனிகள் மக்களின் வாக்குகளை சிதரடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் மிக அவதானமாக வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment