வெனிசுலாவுக்கான எரிபொருள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் தலையீடு - எச்சரித்தது ஈரான்! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

வெனிசுலாவுக்கான எரிபொருள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் தலையீடு - எச்சரித்தது ஈரான்!

வெனிசுலாவுக்கான ஈரானிய எரிபொருள் ஏற்றுமதிக்கு எதிராக அமெரிக்கா "கடற்கொள்ளையர்களைப் போல்" செயற்பட்டால் விளைவுகள் ஏற்படும் என்று உயரடுக்கு புரட்சிகர காவல்படையுடன் நெருக்கமான ஈரானிய செய்தி நிறுவனம் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 

நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கான ஈரானின் எரிபொருள் ஏற்றுமதிக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியொருவர் கடந்த வாரம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார். எனினும் அவர் எட்டவுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த மறுத்துவிட்டார். 

இந்நிலையிலேயே வெனிசுலாவுக்கான எரிபொருள் ஏற்றுமதியில் அமெரிக்காவும், கடற்கொள்ளையர்களைப் போல், சர்வதேச நீர்வழிகளில் பாதுகாப்பின்மையை உருவாக்க விரும்பினால், அது ஆபத்தை ஏற்படுத்தும், அது நிச்சயமாக விளைவு இல்லாமல் போகாது" என்று ஈரானின் நூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஈரானிய துறைமுகத்தில் ஏற்றப்பட்ட எரிபொருளை ஏற்றிச் செல்லும் குறைந்தபட்சம் ஒரு டேங்கர் வெனிசுலாவுக்குப் பயணம் செய்துள்ளது, ரெஃபினிட்டிவ் ஐகானின் கப்பல் கண்காணிப்புத் தகவல்களின்படி, இது தென் அமெரிக்க நாட்டில் பெற்ரோல் பற்றாக்குறையைத் தணிக்க உதவும். 

வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரண்டும் சுயாதீன நாடுகளாக இருக்கின்றன, அவை தொடர்ந்து வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன என்று ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் அலி ரபீயை ஈரானின் அரசு ஒளிபரப்பாளருடன் இணைக்கப்பட்ட ஒய்.ஜே.சி செய்தி வலைத்தளம் மேற்கோளிட்டு வலியுறுத்தியுள்ளது. 

அத்துடன் நாங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம், அதற்கு பதிலாக பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இந்த வர்த்தகத்திற்கும் வேறு எவருக்கும் தொடர்புமில்லை. நாங்கள் எங்கள் எண்ணெயை விற்க வேண்டும், அதைச் செய்வதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன என்றும் ரபீ கூறியுள்ளார். 

ஈரான் மற்றும் வெனிசுலாவின் எண்ணெய் துறைகள், OPEC என்ற எண்ணெய் மற்றும் பெற்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment