இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு விசேட இறக்குமதி வரி - இன்று முதல் 6 மாதங்களுக்கு அமுல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 22, 2020

இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு விசேட இறக்குமதி வரி - இன்று முதல் 6 மாதங்களுக்கு அமுல்

இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு விசேட இறக்குமதி வரியை அறவிடவும் ஒரு சில பொருட்களுக்கு அவ்வரியை அதிகரிக்கவும் நிதியமைச்சு முடிவு செய்துள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், வெள்ளைப்பூடு, சீனி, பருப்பு, செத்தல் மிளகாய், டின் மீன் உள்ளிட்ட சுமார் 40 இற்கும் அதிகமான உணவுப்பொருட்களுக்கு விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு அறவிடப்பட்ட 35 ரூபா வரி, இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களுக்கு அமைய 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீனிக்கான இறக்குமதி வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் டின் மீனுக்கு அறவிடப்பட்ட விசேட வர்த்தக வரி 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் டின் மீனுக்கான இறக்குமதி வரி 50 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கான வரி 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு 25 ரூபா வரி அறவிடப்பட்டதுடன், இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி திருத்தத்திற்கு அமைய 50 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் கடலைக்கான விசேட வர்த்தக வரி 5 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டிற்காக இதுவரையில் அறவிடப்பட்ட வரி 40 இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரி, 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் யோகட்டிற்கு 625 ரூபா இதுவரையில் விசேட வர்த்தக வரியாக அறவிடப்பட்ட நிலையில், இன்று முதல் 800 ரூபா அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, கொண்டைக் கடலை, தோடம்பழம், எலுமிச்சை, திராட்சை, அப்பிள், க்வீன்சஸ், பேரீச்சம்பழம், மரமுந்திரிகை, மிளகாய், மிளகாய்த்தூள், சீரகம், பெருஞ்சீரகம், சோளம், மார்ஜரின், டின் மீன் உள்ளிட்ட மீன் வகைகள், பீட்றூட் சீனி உள்ளிட்ட ஏனைய சீனி வகைகள், சோயா எண்ணெய், மரக்கரி எண்ணைய், தேங்காயெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment