லங்கா IOC பெற்றோல் விலை 5 ரூபாவால் மீண்டும் குறைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

லங்கா IOC பெற்றோல் விலை 5 ரூபாவால் மீண்டும் குறைப்பு

லங்கா IOC நிறுவனம், பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலையை லீற்றருக்கு ரூபா 5 இனால் மீண்டும் குறைத்துள்ளது.

இன்று நள்ளிரவு (23) முதல் இவ்விலை குறைப்பு அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோலின் விலை ரூபா 142 இலிருந்து ரூபா 137 ஆக குறைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை (18) முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை ரூபா 5 இனால் அந்நிறுவனம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad