இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 6 வயது சிறுவன் பலி, மூவர் படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 6 வயது சிறுவன் பலி, மூவர் படுகாயம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 6 வயது சிறுவனொருவன் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய் கிழமை (05.05.2020) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். 

நொச்சிமுனை தரிசனம் வீதியைச் சேர்ந்த 6 வயதுடைய றொபட் டினேஷ் ஹனபன் ஹொசேயா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

புல்லுமலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றை நடாத்திவரும் போதகர், அவர் மனைவி 2 வயது பெண் பிள்ளை உயிரிழந்த சிறுவன் ஆகியோர், சம்பவ தினமான இன்று காலை குறித்த சபைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று நண்பகல் 1.30 மணியளவில் வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, சின்ன புல்லுமலை பிரதேசத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவ இடத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

No comments:

Post a Comment

Post Bottom Ad