இரண்டு நாட்கள் சற்று நிம்மதியடைந்த அமெரிக்கா... ஆனால் நேற்று அதிர்ச்சி கொடுத்த கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 28, 2020

இரண்டு நாட்கள் சற்று நிம்மதியடைந்த அமெரிக்கா... ஆனால் நேற்று அதிர்ச்சி கொடுத்த கொரோனா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குறைந்து வந்த பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 31 லட்சத்து 36 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 9 லட்சத்து 53 ஆயிரத்து 321 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 

ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 813 பேர் உயிரிழந்துள்ளனர்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் தான் உள்ளது. 

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்த வண்ணம் இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 10 லட்சத்து 35 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 266 ஆக உள்ளது. 

கடந்த சில நாட்களாக அந்நாட்டில் வைரசுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து திகதி வாரியாக விவரம்.

ஏப்ரல் 5 - 1,409
ஏப்ரல் 6 - 1,505
ஏப்ரல் 7 - 2,228
ஏப்ரல் 8 - 2,165
ஏப்ரல் 9 - 2,111
ஏப்ரல் 10 - 2,236
ஏப்ரல் 11 - 2,024
ஏப்ரல் 12 - 1,727 
ஏப்ரல் 13 - 1,726
ஏப்ரல் 14 - 2,566
ஏப்ரல் 15 - 2,631
ஏப்ரல் 16 - 2,193
ஏப்ரல் 17 - 2,543
ஏப்ரல் 18 - 1,883 
ஏப்ரல் 19 - 1,570
ஏப்ரல் 20 - 1,952
ஏப்ரல் 21 - 2,683
ஏப்ரல் 22 - 2,358
ஏப்ரல் 23 - 2,340
ஏப்ரல் 24 - 1,957
ஏப்ரல் 25 - 2,065
ஏப்ரல் 26 - 1,157
ஏப்ரல் 27 - 1,384
ஏப்ரல் 28 - 2,470

No comments:

Post a Comment