யாழ்ப்பாணத்திலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

யாழ்ப்பாணத்திலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

யாழ்ப்பாணத்திலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை வழங்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் முன்வந்துள்ளார்.

´கொரோனா´ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் வாடகை இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அவர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனவே, யாழிலுள்ள மலையக பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் முகநூல் பக்கத்திலும் தகவல்களை வழங்கலாம்.

தொலைபேசி இலக்கங்கள் வருமாறு இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் - 0711188000

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad