திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர் சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர் சிலை கொண்டுவந்து வைக்க முற்பட்டபோது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர் சிலை கொண்டுசெல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஆனந்த விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டுசென்றதாகவும் இன்றையதினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு பொதுமக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் கலந்துகொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:
Post a Comment