இன்று (05) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கட்டுகுருந்த பகுதி கடற்கரையில் மிதுந்த நிலையில் காணப்பட்ட ஹேஷ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
10 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையிலிருந்த குறித்த பொதைப் பொருளின் நிறை 11.759 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதைப் பெருளுக்கு உரித்தானவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப் பொருள் தொகையானது, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment