தென் மாகாண ஆளுநர் காலமானார் : பல்வேறு பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 15, 2025

தென் மாகாண ஆளுநர் காலமானார் : பல்வேறு பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி

தென் மாகாண ஆளுநராக தற்போது பதவி வகித்து வரும் பந்துல ஹரிஸ்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.

சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான இவர், மரணிக்கும்போது 62 வயதாகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள அவர், பல்வேறு அரச நிறுவனங்களின் தலைவராவும் பதவி வகித்துள்ளார்.

தனது இடைநிலைக் கல்வியை ஹொரணை ஸ்ரீ பாலி கல்லூரியில் பயின்ற ஹரிஸ்சந்திர, களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்த அவர், ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டத்திற்கான உதவி மாவட்ட தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் காலி உதவி மாவட்ட தேர்தல் ஆணையளராகப் பணியாற்றினார்.

அதன் பின் அவர் காலி கடவத் சதர பிரதேச செயலாளராகவும், காலி மேலதிக மாவட்ட செயலாளராகவும், பதில் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றினார்.

இரத்தினபுரி மாவட்டச் செயலாளராக பதவி வகித்த ஹரிஸ்சந்திர பின்னர் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரிய அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளராகவும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகமாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment