புத்தர் கேட்காத சிலை : சட்டத்தை மீறும் பிக்குகள் : அரசு தடுமாறக்கூடாது : மனோ கணேசன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 17, 2025

புத்தர் கேட்காத சிலை : சட்டத்தை மீறும் பிக்குகள் : அரசு தடுமாறக்கூடாது : மனோ கணேசன் தெரிவிப்பு

சட்டத்தை கையில் எடுத்து, மதத் தலங்களை அமைக்க அல்லது இடிக்க, எவருக்கும் உரிமை இல்லை. திருகோணமலையில் சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகள் தடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பதட்ட நிலை தொடர்பில், தற்போது இந்திய பயணத்தில் இருக்கும் மனோ கணேசன் எம்பி தனது எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது, ஒருங்கிணைந்த இலங்கையின் அடிப்படை, நமது நாட்டு இன, மத, மொழி பன்மைத்துவம் ஆகும்.

எந்த மதத் தலைவருக்கும், பனாமைத்துவத்சை குழப்பி, சட்டத்தை மீறி, மதத் தலங்களை அமைக்கவும் இடிக்கவும், எந்த உரிமையும் கிடையாது.

திருகோணமலையில் சட்டத்தை மீறி சிலை அமைக்கும் பிக்குகளின் செயலை கண்டிக்கிறேன். தனக்கு சிலையை அமைக்குமாறு கௌதம புத்தர் கேட்கவில்லை.

நாட்டின் அரசாங்கம், அடிப்படைவாதத்திற்கு விட்டு தராமல், அதை கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை தெளிவாக அமுல்ப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment