திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான லலித் கன்னங்கர துபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இலங்கையில் துப்பாக்கிச் சூடு, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயை தளமாகக்கொண்டு நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பை இவர் நடத்தி வந்த நிலையில், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ரவிந்து சங்க டி சில்வா எனப்படும் புரு மூனா என்பவரால் ஹங்வெல்ல - குறுக்கு வீதி பகுதியில் உள்ள கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைக்கு தலைமை தாங்கியவர் இவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவர் நீண்டகாலமாக உள்ளூர் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பாரியளவில் போதைப் பொருள் கடத்தல்காரராகவும் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹேவத் லலித் கன்னங்கர என்பவரின் நான்கு சகாக்கள் ஹங்வெல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment