திருகோணமலை - குச்சவெளி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் வைத்து பெண் ஒருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா இலட்சம் பெற்றுக் கொண்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நிலாவெளியில் உள்ள காணியில் ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காக காணி உரிமையாளர் காணிக்கான அனுமதிப்பத்திரம் பெற முயற்சித்தபோது அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக்கூறி காணி உரிமையாளரான பெண்ணிடமிருந்து குச்சவெளி பிரதேச சபை தவிசாளரான ஏ.முபாரக் இலஞ்சம் கோரியதாகவும் இரண்டு இலட்சத்தில் இருந்து பேரம்பேசப்பட்டதாகவும் இறுதியில் ஐந்து இலட்சத்திற்கு உடன்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட பின்னர் நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. இவரை கைது செய்வதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் அங்கே பல நாட்களாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment