கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (14) காலை விசாரணைக்கு வந்தபோது, சமர்ப்பணங்களை பரிசீலித்த குருநாகல் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக அவர் பணிபுரிந்த காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கமைய ஜூலை 28 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment