'கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ : ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 23, 2025

'கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ : ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம்

ஆசிய கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்.

கடந்த மாதம் 28ஆம் திகதி துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது.

இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.

இது சர்ச்சையான சூழலில் தற்போது ஆசிய கிண்ணத்தை இந்திய அணியின் வசம் வழங்க வேண்டுமென ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது. இதை BCCI செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இணங்க மறுத்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) முறையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 04 முதல் 07ஆம் திகதி வரையில் ICC ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment