ரூ. 6 இலட்சம் பெறுமதியான பணத்துடன் கண்டெடுத்த பணப்பை ஒன்று உரியவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பாதுகாப்பு பிரிவு பெண் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே அதனை கண்டெடுத்து கையளித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (23) நாராஹேன்பிட்டி - திம்பிரிகஸ்யாக வீதியில் வீழ்ந்து கிடந்த குறித்த பணப் பையை அதன் உரிமையாளரான பிரிட்டனைச் சேர்ந்த சப்ரீனா கெமரனிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் பரிசோதகர் யமுனா குமாரி மற்றும் பெண் கான்ஸ்டபிள் சமன்மலி (12093) ஆகியோரே குறித்த பணப்பையை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு பிரதமர் பாதுகாப்பு பிரிவிற்கு அழைத்து, அதனை வழங்குவதற்கான நடவடிக்கையை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுமித்ர டி சில்வா நடவடிக்கை எடுத்திருந்தார்.
குறித்த பணப்பையில் யூரோ, அமெரிக்க டொலர்கள், ஸ்டேர்லிங் பவுண்கள் உள்ளிட்ட ரூ. 6 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் இருந்துள்ளதோடு, இலங்கை ரூ. 6,000 மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகளின் அட்டைகள், சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டை உள்ளிட்ட பெறுமதியான ஆவணங்களும் அதிலிருந்துள்ளது.
தனது மகனுடன் பிரதமர் பாதுகாப்பு பிரிவிற்கு வந்த குறித்த வெளிநாட்டுப் பெண், பெறுமதிமிக்க குறித்த ஆவணங்களுடன் அதனை வழங்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இருவரினதும் நேர்மைக்கு, தமது பாராட்டுகளை தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் நேர்மையானவர்கள் இருப்பதாக மெச்சிய அவர், இலங்கை பொலிஸாருக்கும், பிரதமரின் பாதுகாப்பு பிரிவிற்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment