(இராஜதுரை ஹஷான்)
நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்க்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்தால் கொலை செய்யும் ஆட்கள் உள்ளார்கள். பாதாளக் குழுக்களை மாத்திரம் நாட வேண்டிய அவசியம் கிடையாது. தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி என்பதால் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் நாங்கள் விமர்சிக்கப் போவதில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் சகல எதிர்க்கட்சிகளும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவரும் இல்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எண்ணக்கரு தெளிவற்றதாக உள்ளது. ஆகவே இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் நாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை.
எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணி நடத்துவதாக குறிப்பிடுகிறார்கள். நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா இவர்கள் கொழும்புக்கு வருகிறார்கள்.  கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இலக்கு குறித்து முதலில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment