ஹஷிஷ் போதைப் பொருளுடன் கனேடியர் கைது : துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 21 வயது நபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 28, 2025

ஹஷிஷ் போதைப் பொருளுடன் கனேடியர் கைது : துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 21 வயது நபர்

துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 21 வயதுடைய கனேடிய நாட்டு நபர் ஒருவர், 18.253 கிலோ கிராம் ஹஷிஷ் (Hashish) போதைப் பொருளுடன் சுங்கத் திணைக்கள போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCU) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (27) இரவு 10.30 மணியளவில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) வந்த எமிரேட்ஸ் EK 648 விமானத்தில் வந்த பயணிகளை மேற்கொண்ட சோதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

குறித்த போதைப் பொருள் அவரது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட போதைப் பொருளின் தெரு மதிப்பு சுமார் ரூ.182.53 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணைகள் சுங்கத்துறையின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிடிபட்ட போதைப் பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக போதைப் பொருள் விசாரணைப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment