பஸ்களில் பயணிப்போருக்கு பயணச்சீட்டு கட்டாயம் : மீறும் பயணிகள், நடத்துனர்களுக்கு அபராதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 30, 2025

பஸ்களில் பயணிப்போருக்கு பயணச்சீட்டு கட்டாயம் : மீறும் பயணிகள், நடத்துனர்களுக்கு அபராதம்

பயணச்சீட்டு இன்றி பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.​

அதேநேரம் பயணச்சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதன் செயற்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை முதல், மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதலும், அதில் பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தின்போது அதனை தம்வசம் வைத்திருப்பதும் கட்டாயமானதாகும் என அவர் சுட்டுக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment