இலங்கையர்களுக்கு 'இரத்த நிலவை' காணும் அரிய வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 6, 2025

இலங்கையர்களுக்கு 'இரத்த நிலவை' காணும் அரிய வாய்ப்பு

‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.

நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இந்த தகவலைத் தெரிவித்தார்.

முழு சந்திர கிரகணம் நிகழும்போது, பூமி சரியாகச் சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையே வரும். இதனால், பூமியின் இருண்ட நிழல் (umbra) நிலவின் மீது முழுமையாகப் படர்ந்துவிடும்.

சூரிய கிரகணத்தைப் போல நிலவு முற்றிலும் இருண்டு போகாது. மாறாக, பூமியின் வளிமண்டலம் வழியாகச் சூரிய ஒளி வளைந்து செல்வதால், நிலவு சிவந்த நிறத்தில் ஒளிரும்.

இந்தச் சிவந்த நிறத்திற்குப் பின்னால் ‘ரேலே சிதறல்’ (Rayleigh scattering) என்ற அறிவியல் நிகழ்வு உள்ளது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமிக்கும்போதும் வானம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் தோன்றுவதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment