கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (08) நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோது விடுக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை விசாரித்த நீதவான் அவரை பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கினார்.
அதற்கமைய ரூ. 2 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவமொன்றில் முன்வைக்கப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி கொச்சிக்கடை பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பிரதான் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதித்து நீதவான் ரகித அபேசிங்க உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
No comments:
Post a Comment