இந்தியாவின் ஆபரரேன் சிந்தூர் தாக்குதலில் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு தமது அணியின் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சல்மான் அலி அகா இதனை அறிவித்துள்ளார்.
ஒரு அணி எனும் வகையில, மே 07ஆம் திகதி இந்தியாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு எமது பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளோம் என போட்டிக்குப் பிந்தைய ஊடகவியலாளர் சந்திபில் அகா தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ், ஆசிய கிண்ண தொடருக்கான தனது முழு சம்பளத்தையும் நாட்டின் ஆயுதப் படைகளுக்கும், பஹல்கம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்கமில் இடம்பெற்ற தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுக்கும் விதமாக, 15 நாட்களுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் முன்னெடுத்து, எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்களை குறிவைப்பதாக அறிவித்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசிய கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அணித் தலைவர் கிண்டல் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் .
இந்தியாவின் இந்த நடவடிக்கை “ஏமாற்றமளிக்கிறது” என்று கூறிய அகா, அவர்கள் கைகுலுக்காமல் எங்களை அவமதிக்கவில்லை, கிரிக்கெட்டை அவமதிக்கிறார்கள். சிறந்த அணிகள் அவர்கள் செய்வததைப் போன்று செய்வதில்லை.” என அகா குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி விளையாட்டின் கடமையை நிறைவேற்றியுள்ளது. கிண்ணத்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றோம். எங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்பியதால் நாம் புகைப்படத்தை எடுப்பதற்கு சென்றோம். நாங்கள் அங்கே நின்று எங்கள் பதக்கங்களை பெற்றுக் கொண்டோம். நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று (28) துபாயில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொண்டதோடு, பாகிஸ்தானின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை வாங்க இந்தியா மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவர் கிண்ணத்துடன் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment