கொட்டாவ பகுதியில் பல்வேறு தோட்டாக்களுடன் இளைஞன் கைது : 458 ரவைகள், போதைப் பொருள், போலி வாகன இலக்கத் தகடுகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 29, 2025

கொட்டாவ பகுதியில் பல்வேறு தோட்டாக்களுடன் இளைஞன் கைது : 458 ரவைகள், போதைப் பொருள், போலி வாகன இலக்கத் தகடுகள் மீட்பு

கொட்டாவ பகுதியில் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 30 போலி வாகன இலக்கத்தகடுகள், 15 வாகன வருமான உரிமங்கள், 15 காப்பீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment