பி.வி.சி. குழாயினுள் மறைத்து வைத்து சுமார் ரூ. 20 மில்லியன் (ரூ. 2 கோடி) மதிப்புள்ள ஹெரோயினை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (21) சந்தேகநபர் ஒரு குறிப்பிட்ட நபருக்கு வழங்குவதற்காக PVC குழாயில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் செல்வதாக விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பயாகல பகுதியில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 44 வயதான குடா பயாகல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்த பிவிசி குழாயை சோதனை செய்தபோது, 1.175 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடல் வழியாக படகு மூலம் கொண்டுவரப்பட்ட பெருமளவிலான போதைப் பொருள் மொத்தமாக விநியோகிக்கப்பட்டுள்ளதை சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
படங்கள்: பாணந்துறை சுமித் பிரேமதிலக
No comments:
Post a Comment