முப்படையினரின் அர்ப்பணிப்பு, மனிதாபிமானத்தை பாராட்டிய சிராஜ் எக்ஸலண்ட் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் - News View

About Us

About Us

Breaking

Monday, August 18, 2025

முப்படையினரின் அர்ப்பணிப்பு, மனிதாபிமானத்தை பாராட்டிய சிராஜ் எக்ஸலண்ட் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும்

சிராஜ் எக்ஸலண்ட் கொலெஜில் தரம் 9 ஆண்டு மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொப்பிகல பகுதிக்கு களப்பணம் மேற்கொண்டிருந்தனர்.

சிராஜ் எக்ஸலண்ட் கொலெஜ் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.ரஹீஸ் வழிகாட்டலின் இடம்பெற்ற இக்களப்பயணத்தில் தொப்பிகல பகுதியில் அமைந்துள்ள இராணுவ ஞாபகார்த்த நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டனர்.

இதில் கிழக்கு மாகாணத்தில் முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட மாவிலாறு, வாகரை, தொப்பிகல, சம்பூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைள் தொடர்பிலும் இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு, தியாகங்களுக்கும் இராணுவத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

அத்தோடு, இக்களப்பயணம் இம்மாணவர்களுக்கு இராணுவத்தினரின் தியாகஙகளை விளங்கி கொள்ளக்கூடிய வகையில் மிக பிரயோசமான அமைந்திருந்தது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில் இராணுவத்தினர் விளக்கமளித்தனர்.

நான்கு பெரிய நினைவுக்கற்களும் முப்படையினரையும் பொலிஸாரையும் கிடை நிலையான நினைவுக்கல் இந்நாட்டிற்கான உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குறிப்பதாகவும் அவர்கள் இணைந்து இந்நாட்டைக்காத்து வருதவனை நினைவுத்தூபிக்கருகிலுள்ள கோடுகள் குறிப்பதாகவும் தெளிவான விளக்கத்தினை மாணவர்களுக்கு வழங்கினர்.

இதனைப்பார்வையிட்ட மாணவர்கள் இராணுவத்தினரின் கட்டிடக்கலையினை வியந்து பாராட்டினர்.

அத்தோடு, சிராஜ் எக்ஸலண்ட் கொலெஜ்யின் விஞ்ஞானப்பாட ஆசிரியர் யூ.எம் ஹாரிஸ், விவசாயப் போதானாசிரியர் எம் ஹஸ்மீர் ஆகியோர் காடுகளின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினர்.

அத்துடன், காடுகளை விரைவாக உருவாக்குவதற்கான விதைப்பந்து தயாரிப்பு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களால் தயாரிக்கல்பட்ட விதைப்பந்துகளை காடுகளுக்குள் வீசி புதுவிதமான அனுபவித்தினைப் பெற்றனர்.

தொப்பிகல மலையுச்சியில் அமைந்திருந்த வளாகத்தில் மாணவர்களுக்கான முதலுதவிப்பயிற்சினை ஐ.ரஜா வழங்கினார்.

தொப்பிகல மலையுச்சிக்கு வருகின்ற பொதுமக்களுக்களுக்கு இடர்கள், அனர்த்தனங்கள் ஏற்படதா வகையில் இராணுவத்தினர் இரவு, பகலாக தியாகம் புரிந்து வருவதனை எவராலும் மறுக்க முடியாது

இக்களப்பயணத்தில் ஏல்.எஸ்.எம்.சதீக் ஆசிரியர், என்.எம்.ஹனிபா ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment